×

சகோதரத்துவத்தை வெளிப்படுத்தும் ரக் ஷா பந்தன் பண்டிகை: நாடு முழுவதும் வெகு விமரிசையாகக் கொண்டாட்டம்

ஜம்மு-காஷ்மீர்: சகோதரத்துவத்தை வெளிப்படுத்தும் ரக் ஷா பந்தன் விழா நாடு முழுவதும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடிக்கு பள்ளி சிறுமிகள் ரக் ஷா பந்தன் வாழ்த்துக்களை தெரிவித்தனர். பின்னர் குழந்தைகள் மற்றும் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவிகள் பிரதமருக்கு ராக்கி கயிறு அணிவித்து மகிழ்ந்தனர்.

ஜம்மு காஷ்மீரில் ரக் ஷா பந்தன் விழா இந்த ஆண்டு பாதுகாப்பு படை வீரர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக கொண்டாடப்பட்டது. இதனால் நன்றி ஜவால் என்ற பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்த ஏராளமான பெண்கள் ராக்கி கயிறுகளை கைப்பட தயாரித்து ராணுவ வீரர்களுக்கு அணிவித்து சகோதர அன்பினை வெளிப்படுத்தினர்.

ஜம்மு-காஷ்மீரின் சர்வதேச எல்லை பகுதியான சம்பா செக்டரில் ராணுவ வீரர்களுக்கு பள்ளி சிறுமிகள், பெண்கள் ஆரத்தி எடுத்து திலகமிட்டு, இனிப்பு ஊட்டி, ராக்கி கயிறு அணிவித்து மகிழ்ச்சியையும், தன்னலமில்லா சேவைக்கு நன்றியும் தெரிவித்தனர். உத்தன்பூரில் பாதுகாப்பு படை வீரர்களை ஏராளமான மாணவிகள் ராக்கி அணிவித்து வாழ்த்தினர். ரக் ஷா பந்தனை முன்னிட்டு சகோதரர்களுக்கு இனிப்புகள் மற்றும் ராக்கி கயிறுகளை வாங்க பெரும்பாலான நகரங்களில் சிறுமிகள், பெண்கள் ஆர்வம் காட்டினர்.

The post சகோதரத்துவத்தை வெளிப்படுத்தும் ரக் ஷா பந்தன் பண்டிகை: நாடு முழுவதும் வெகு விமரிசையாகக் கொண்டாட்டம் appeared first on Dinakaran.

Tags : Rag Shah Bandhan Festival ,Jammu and ,Kashmir ,PM ,Delhi ,Raag Shah Bandan Festival ,
× RELATED ஜம்மு காஷ்மீரில் ரோந்து பணியின்போது...